மார்ச் 21
சர்வதேச காடுகள் தினம்
வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, கடல்நீர் பெருக்கம் என இன்று உலகம் சந்தித்து வரும் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் காடுகள் அழிக்கப்படது தான். உலகில் மனிதன் உட்பட பெரும்பாலான உயிரிகளின் வாழ்வாதாரம் காடுதான்.
மக்கள் தொகை பெருக்கத்தாலும், நவீனமயமாதலாலும் இந்த காடுகள் படிப்படியாக அழிந்து வருகின்றன. இது நம் எதிர்கால்த்துக்கு மட்டுமின்றி, வருங்கால சந்ததியினருக்கும் பெரும் கேடாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே, இந்த காடுகளின் முக்கியத்துவத்தை அனைத்துலக மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காகவும், எஞ்சியிருக்கும் காடுகளை அழிவிலிருந்து காப்பதற்கும், புதிய காடுகளை உருவாக்குவதற்கும் வழிவகை செய்யும் நோக்கத்தோடு அனுசரிக்கப்படுவது சர்வதேச காடுகள் தினம்.
கடந்த, 2012ம் ஆண்டு, நவம்பர் 28ம் நாள், ஐக்கிய நாடுகள் பொது அவை, மார்ச் 21ம் நாளை சர்வதேச காடுகளை தினமாக அறிவித்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி சர்வதேச காடுகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவளித்துள்ளன. இந்த காடுகள் தினத்தன்று அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து உலக நாடுகளின் பல பகுதிகளில், மரம் நடுதல், காடுகளை பேனிக் காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தவிற ஒவ்வொரு நாடும் தனித்தனியே காடுகள் தினத்தையும் அனுசரித்து வருகின்றன.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1844 - பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 - நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
1935 - பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இன்றைய சிறப்பு தினம்
விடுதலை நாள் (நமீபியா)
மனித உரிமைகள் தினம் (தென்னாபிரிக்கா)
.jpg)
No comments:
Post a Comment