Sunday, 1 February 2015

சரியுது யூரோ மதிப்பு… எரியுது இந்தத் தொழிலாளிங்க வயிறு…


கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு 61, 62 என்ற வாக்கிலேயே இருந்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ மதிப்பு மட்டும் சரிந்து கொடே வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்திய மதிப்பிற்கு நிகரான யூரோவின் மதிப்பு 90 ரூபாயாக இருந்தது. அது படிப்படையாகக் குறைந்து இன்று 70 ரூபாய்க்கு வந்துள்ளது.
இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ, நம் திருப்பூர், துணி தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கிறது. காரணம், திருப்பூரிலிருந்து பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளுக்கே துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி செய்யப்படும் துணிகளின் மதிப்பு யூரோவிலும், டாலரிலுமே கணக்கிடப்படுகிறதாம். இதனால், யூரோவின் வீழ்ச்சியும், உயர்வும் திருப்பூர் தொழில்துறையை அதிகம் பாதிக்கிறது.
ஐரோப்பிய நாட்டு வணிகர்கள் இடமிருந்து ஆர்டர் பெற்று, ஆடை உற்பத்தி செய்ய, குறைந்தபட்சம் 60 முதல் 90 நாட்களாகிறது. இந்த உற்பத்தி காலத்திற்குள்ளாக, அன்னிய பண மதிப்புகளில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டால், ஆடைகளுக்கு நிர்ணயித்த முழுமையான தொகை தொழில் துறையினருக்கு கிடைப்பதில் பெறும் மாறுதல்கள் உண்டாகின்றன.
ஆர்டர் எடுக்கும்போது, யூரோ, டாலர் மதிப்பு உயர்ந்தும், ஆர்டர் அனுப்பும்போது சரிந்தும் இருந்தால், தொழில் துறையினருக்கு நஷ்டம்; மாறாக, அன்னிய பண மதிப்பு உயர்ந்தால், நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். எனவே கடந்த மூன்று மாதங்களாக யூரோ மதிப்பில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியால், தொழில் நஷ்டத்தால் வயிற்றெரிச்சலில் உள்ளனர் திருப்பூர், தொழில் துறையினர்.
இதனால், லாபம் குறைந்துவிட்டதுடன், புதிய ஆர்டர்களுக்கு விலை நிர்ணையிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், திருப்பூரில் இருக்கும் ஆடிட்டர் ஒருவரின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான கடன் விவகாரத்தால் தான் யூரோவின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், யூரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக வரவும் வாய்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், யூரோவின் இந்திய மதிப்பு ரூ. 63 வரை சரிய வாய்பு உள்ளதாம்.

”உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது”


தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து இலங்கை ராணுவத்தை முற்றிலுமாக வெளியேற்ற வாய்ப்பில்லை என்றும், ராஜபக்ஷ மீதான போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலேயே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இலங்கை அமைச்சர் வேலாயுதம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கை தொழிற்சாலைத்துறை அமைச்சர் வேலாயுதம், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்பு முடிந்த பின், அமைச்சர் வேலாயுதம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவர், தமிழக மக்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன்.
தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கருணாநிதி. ராஜபக்சே மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
ராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்த தொடங்கியுள்ளது. ஆனால், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை முற்றிலும் விலக்க தற்போது வாய்ப்பில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பாடச்சாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.
இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து பேச இருக்கிறேன். அதற்கு நான் நேரம் கேட்டுள்ளேன்.

மீண்டும் மிஸ்டர் பீன் – Mr.Bean…!


நடிகர் ரோவன் அட்கின்ஸன் (rowan atkinson) தனது புகழ்பெற்ற மிஸ்டர் பீன் பாத்திரத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். 60 வயதான ரோவன் அட்கின்ஸன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
மிஸ்டர் பீன் பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் அவர். ஆனால், கடந்த 8 வருட காலத்தில் தொலைக்காட்சிக்காக மிஸ்டர் பீன் பாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. ஆனால், 3 வருடங்களுக்குமுன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது நேரடி நிகழ்ச்சியொன்றில் மிஸ்டர் பீன் வேடத்தில் அவர் தோன்றினார்.
இந்நிலையில் புதிய மிஸ்டர் பீன் கதையொன்றில் ரோவன் அட்கின்ஸன் நடிக்கவுள்ளார் என பி.பி.சி. தெரிவித்துள்ளது. நலநிதியமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக அவர் இப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சி பிபிசியில் ஒளிபரப்பாகவுள்ளது. மிஸ்டர் பீன் பாத்திரத்தில் ரோவன் அட்கின்ஸன் நடிக்க ஆரம்பித்து 25 வது ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ கீழே)

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்..!


காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. இத்திருக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும்.
அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது.
இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 2)


பிப்ரவரி 2
1790
கட்ட பொம்மன் முடி சூடிய தினம்
ஆங்கிலேயர் ஆட்சியை வெறுத்த, வீரபாண்டிய கட்ட பொம்மன், பாளையங்குறிச்சிக் கோட்டையின் மன்னராக முடி சூடிய தினம் இன்று.
1760ம் ஆண்டு, தெலுங்கு வம்சாவழியைச் சேர்ந்த, ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு பாளையங்குறிச்சியில் ஜனவரி 3ம் நாள் பிறந்தார் கட்ட பொம்மன்.
இவரது இயற்பெயர் வீரபாண்டியன் என்பதாகும். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துனைவியார் பெயர், வீரசக்கம்மாள்.
இவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை. இவர் அரசப் பொறுப்பிற்கு வரும் போது இவருக்கு வயது 30. இவரது ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள், இந்தியாவை வசப்படுத்தும் விதமாக, சிற்றரசர்களிடம் வரி வசூலித்து வந்தனர்.
இதனை முற்றிலுமாக எதிர்த்து நின்ற வீரபாண்டிய கட்ட பொம்மனிடமிருந்து ஆங்கிலேயர்களால் வரி வசூலிக்க முடியவில்லை. இதனால் 1797ம் ஆண்டு, ஆங்கிலேய தளபதி ஆலன் துரை தலைமையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீது போர் தொடுத்தது கிழக்கிந்திய கம்பெனி.
இந்தப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை புறமுதுகு காட்டி ஓடவிட்டார். பொம்மனை வீரத்தால் வெற்றி கொள்ள முடியாத நிலையில், தந்திரமாக சந்திக்க அழைத்து கைது செய்ய திட்டமிட்டது கிழக்கிந்திய கம்பெணி.
வெகு நாட்கள் அலைக்கழித்தப் பின் செப்டம்பர் 10, 1798ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெணியின் மாவட்ட கலெக்டர் ஜாக்சன் கட்ட பொம்மனைச் சந்தித்து கைது செய்ய முயன்றார். ஆனால் இதில் சுதாரித்துக் கொண்ட பொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றார்.
1799ம் ஆண்டு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி தாக்குதலுக்குள்ளானது. இந்த தாக்குதலில் வீரபாண்டிய கட்ட பொம்மன் கோட்டையை விட்டு வெளியேற நேர்ந்தது. அதே ஆண்டு, அக்டோபர் 16ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியால் கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.
1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
உலக சதுப்பு நில நாள்

வாங்க ஒபாமா சைய்யா சைய்யா பாட்டுக்கு ஆடுவோம்: ஷாருக்கான்..!


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சைய்யா சைய்யா பாடலுக்கு நடனமாடுவதற்கு தான் விரும்புவதாக பாலிவூட் நட்சத்திரமான ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த 27 ஆம் தேதி நிகழ்வொன்றில் உரையாற்றுகையில்,
2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தான் மேற்கொண்ட முதல் பயணத்தை நினைவுகூர்ந்தார். "இந்தியர்களும் அமெரிக்கர்களும் உலகில் மிக கடினமாக பாடுபடும் மக்கள்.
ஷாருக்கான், மில்கா சிங், மேரி கோம் போன்றோர் உந்துசக்தியளிப்பவர்கள் என் அவர் கூறினார். அத்துடன் ஷாருக்கானின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே திரைப்படத்தில் இடம்பெற்ற "சொனோரிட்டா. என ஆரம்பமாகும் இந்தி வசனத்தின் ஒரு பகுதியையும் ஒபாமா பேசிக் காட்டியபோது அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் தனது பட வசனம் இடம்பெற்றமை குறித்து நடிகர் ஷாருக்கான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். "ஜனாதிபதி ஒபாமாவின் பாலின மற்றும் மத சமத்துவ உரையில் இடம்பெற்றமை குறித்து பெருமையடைகிறேன்.
அவர் பங்காரா நடனமாடாதமை கவலையளிக்கிறது. அடுத்த தடவை சைய்யா சைய்யா நிச்சயம்" என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஷாருக் கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் ஆகியோர் நடித்து கடந்த வருடம் வெளியான ஹாப்பி நியூ இயர் படத்தின் இந்திப் பதிப்பு 42 கோடி இந்திய ரூபாவை வசூலித்தது.
எனினும் கடந்த வருட வெளியான படங்களுக்கான விருதுப் பட்டியலில் ஷாருக்கானின் விருது எதற்கும் பரிந்துரைக்கப்படாதமை அவரின் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் சிறப்பாக நடிக்காதமையால் தனது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாமல் இருக்கலாம் என பெருந்தன்மையுடன் ஷாருக்கான் கூறியுள்ளார்.
"ஹெப்பி நியூர் படம் வசூலில் வெற்றி பெற்றது.
ஆனால் ஒரு நடிகராக நான் சிறப்பாக நடிக்கவில்லை. எனவே நான் விருதுக்கு தகுதியுடையவனல்ல என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறுவன் செய்யுர வேலையா இது..?


அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான சிறுவனொருவன் மருத்துவமனையொன்றில் ஒரு மாதகாலம் மருத்துவரைப் போன்று நடித்துத் திரிந்துள்ளான்.
இச்சிறுவன் மருத்துவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு ஸ்டெதஸ்கோப் உடன் புளோரிடா மாநிலத்திலுள்ள இந்த மருத்துவமனையில் நடமாடித் திரிந்துள்ளான். டாக்டர் ராபின்சன் என தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான்.
இவன் நோயாளிகள் எவரையும் பரிசோதிக்காத போதிலும் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கும் சென்று வந்தமை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
ஒரு மாதகாலத்தின் பின்னரே அச்சிறுவனின் நடிப்பு அம்பலமாகியது.