கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு 61, 62 என்ற வாக்கிலேயே இருந்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ மதிப்பு மட்டும் சரிந்து கொடே வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்திய மதிப்பிற்கு நிகரான யூரோவின் மதிப்பு 90 ரூபாயாக இருந்தது. அது படிப்படையாகக் குறைந்து இன்று 70 ரூபாய்க்கு வந்துள்ளது.
இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ, நம் திருப்பூர், துணி தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கிறது. காரணம், திருப்பூரிலிருந்து பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளுக்கே துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி செய்யப்படும் துணிகளின் மதிப்பு யூரோவிலும், டாலரிலுமே கணக்கிடப்படுகிறதாம். இதனால், யூரோவின் வீழ்ச்சியும், உயர்வும் திருப்பூர் தொழில்துறையை அதிகம் பாதிக்கிறது.
ஐரோப்பிய நாட்டு வணிகர்கள் இடமிருந்து ஆர்டர் பெற்று, ஆடை உற்பத்தி செய்ய, குறைந்தபட்சம் 60 முதல் 90 நாட்களாகிறது. இந்த உற்பத்தி காலத்திற்குள்ளாக, அன்னிய பண மதிப்புகளில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டால், ஆடைகளுக்கு நிர்ணயித்த முழுமையான தொகை தொழில் துறையினருக்கு கிடைப்பதில் பெறும் மாறுதல்கள் உண்டாகின்றன.
ஆர்டர் எடுக்கும்போது, யூரோ, டாலர் மதிப்பு உயர்ந்தும், ஆர்டர் அனுப்பும்போது சரிந்தும் இருந்தால், தொழில் துறையினருக்கு நஷ்டம்; மாறாக, அன்னிய பண மதிப்பு உயர்ந்தால், நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். எனவே கடந்த மூன்று மாதங்களாக யூரோ மதிப்பில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியால், தொழில் நஷ்டத்தால் வயிற்றெரிச்சலில் உள்ளனர் திருப்பூர், தொழில் துறையினர்.
இதனால், லாபம் குறைந்துவிட்டதுடன், புதிய ஆர்டர்களுக்கு விலை நிர்ணையிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், திருப்பூரில் இருக்கும் ஆடிட்டர் ஒருவரின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான கடன் விவகாரத்தால் தான் யூரோவின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், யூரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக வரவும் வாய்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், யூரோவின் இந்திய மதிப்பு ரூ. 63 வரை சரிய வாய்பு உள்ளதாம்.
No comments:
Post a Comment