Tuesday, 24 February 2015

"அன்னை தெரசா மதமாற்றத்துக்காகவே வந்தவர்"-R.S.S.!! ‘ஜிங் ஜக்’ போடும் சிவசேனா!!


அன்னை தெரசா பற்றி உலகிற்கே தெரியும். இந்தியாவின் கொல்கத்தாவில் 50 ஆண்டுகள் தங்கி இருந்து ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்வையே அர்பணித்த ஒரு அயல்நாட்டவர்.
இவருக்கு 1979ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கிறித்துவ மதத்தை சேர்ந்தவரான இவர் மதமாற்றம் செய்வததற்காகவே இந்தியாவிற்கு அனுப்பிவிக்கப்பட்டார் என்று சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோகன் பகவத்.
ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த திங்கட் கிழமை, ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்,
"அன்னை தெரசா ஆற்றிய சேவைகள் சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், அந்த சேவை யாருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நபரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது"
"மதமாற்றம் செய்யப்படுவது இங்கே கேள்வியில்லை. ஆனால், சேவையின் பெயரால் மதமாற்றம் செய்யப்பட்டால், அந்தச் சேவை மதிப்பிழந்து போகிறது" என்று முரனான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் மதப் பிரிவினை அதிகரித்து விட்டது என்று கருத்து கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடி, இந்தியாவில் மத்ச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் தான் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., இவ்வாறு மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கருத்துக்கு கிறிஸ்துவ மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தில்லி கத்தோலிக்க ஆர்க் டயோசிஸின் அருட் தந்தையான சவரிமுத்து, "இது வருத்தத்திற்குரிய கருத்து. அன்னை தெரசா ஆதரவற்றவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சியான காங்கிஸ், இந்தக் கருத்துக்கு பா.ஜ.க., வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், காங்கிரஸ் தலைவரான ராஜிவ் சுக்லா, “அன்னை தெரசாவை இப்படி அவமானப்படுத்தக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.
தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், "கொல்கத்தாவில் உள்ள நிர்மல் ஹ்ருதய் ஆசிரமத்தில் அவருடன் சில மாதங்கள் நான் பணியாற்றியிருக்கிறேன். அவர் மிக உன்னதமான ஆத்மா. அவரை விட்டுவிடுங்கள்" என்று தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?" என்று தன் டுவிட்டர் பக்கம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதற்கு பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு இந்த்துவ அமைபான சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியது கசப்பான உண்மை என்று கூறியுள்ளது.
சிவ சேனாவின் சாம்னா பத்திரிக்கையில் இது குறித்து வெளியிடப்பட்டிருப்பதாவது:
”இந்தியாவில் உள்ளவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்தான் அன்னை தெரசா.”
“இஸ்லாமியர்கள் வாளைக் காட்டி மிரட்டி மதமாற்றம் செய்தனர்.”
”கிறிஸ்தவர்கள் பணத்தையும், சேவையை காட்டி மதமாற்றம் செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”
அதோடு, அன்னை தெரசாவின் சேவை மதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், எத்தனையோ சமூக சேவர்கள், அதே சேவையை மதமாற்றம் இல்லாமல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது சிவ சேனா.

No comments:

Post a Comment