Tuesday, 24 February 2015

அது உண்மைக்கு புறம்பான செய்தி.. துளியும் உண்மை இல்லை..!


அண்மையில் பாலிவுட் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சல்மான் கானுடன் சேர்ந்து அனுஷ்கா சர்மா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து, இதில் துளி கூட உண்மை இல்லை என கூறியுள்ளார் அனுஷ்கா சர்மா.
இதுகுறித்து, அனுஷ்கா சர்மா கூறுகையில், நான் ஷாருக் கான் மற்றும் அமீர் கானுடன் இணைந்து நடித்துள்ளேன். பீகே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து தான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.
ஆனால், இது உண்மைக்கு புறம்பான செய்தி. இதுதொடர்பாக, யாரும் என்னை இதுவரை தொடர்புகொள்ளவில்லை. சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. ஆனால், அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
இந்த வருடம், எனது நடிப்பில், பாம்பே வெல்வெட், என்.ஹெச்.10 மற்றுமம் தில் தடக்னே டூ படம் வெளியாக உள்ளது. இதற்கு பிறகு, கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment