சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நேற்று வெளிவந்திருக்கும் படம் ’காக்கி சட்டை’.
உலகமெங்கும் சுமார் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? இல்லையா..? என்ற கேள்விதான் தற்போது கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
குறுக்கிய காலத்திலேயே முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்துவரும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் டான்ஸ், ஆக்ஷன், காமெடி என தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறாராம். ஆனால் அவரின் முந்தைய படங்களை போன்று இந்த படம் இல்லை என கருதுகின்றார்களாம் பெரும்பாலான ரசிகர்கள்.
குறிப்பாக, போலீஸ் படத்துக்கே உரிய பரபரப்பும், ஆக்ஷன் காட்சிகளும் முழுமையாக இல்லாமல், சிவகார்த்திகேயனுக்கே உரிய முழுமையான காமெடிப் படமாகவும் இல்லாமல் இருப்பதால் ‘காக்கி சட்டை’ முழுத்திருப்தியைத் தரவில்லை என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், ‘பார்க்கலாம்... போரடிக்கவில்லை’ என்ற கருத்தையும் பல ரசிகர்கள் சொல்கின்றனர்.
விமர்சனரீதியாகவும் ‘காக்கி சட்டை’க்கு பெரும்பாலான இணையதளங்கள் ‘ஆவரேஜ்’ எனவும், ஒரு சில இணையதளங்கள் நன்றாக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளன. பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை இப்படம் ஏமாற்றம் அளித்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுத்தேர்வு நெருங்குவது, உலக கோப்பை கிரிக்கெட் போன்ற காரணங்களால் இப்படத்திற்கு முதல்நாளான நேற்று தியேட்டர்கள் ஃபுல்லாகவில்லை என்ற ரிப்போர்ட்டே கிடைத்துள்ளது.
அதோடு தமிழகமெங்கும் முதல்நாளில் இப்படம் 4 கோடிக்கும் குறைவாக வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 7 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment