உலகக் கோப்பை போட்டியில் இந்த முறை இந்தியா மிக மோசமாக தோற்று வெளியேறப் போகின்றது என்று நினைத்தவர்களுக்கெல்லாம் முதல் இரண்டு போடிகளின் வெற்றி மூலம் இந்திய அணி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
அவர்கள் அப்படி நினைத்ததும் தப்பில்லை. ஏனெனில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலும் சரி, முத்தரப்பு போட்டிகளிலும் சரி, பயிற்சி ஆட்டத்திலும் சரி அந்தளவு ஜொலிக்க வில்லை. படு மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்திய அணியின் இந்த அதீத மாற்றத்திற்கு கேப்டன் தோனியின் புத்திசாலித்தனமான சூத்திரம் ஒன்றிருக்கின்றதாம்.
தோனி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, மோகித் சர்மா ஆகியோருடன் வெளியே சென்றிருந்த போது, அவர்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து தனது கையாலேயே பரிமாறி அவரகளுடன் மனம் விட்டு பேசியுள்ளார். அவர்களின் குறைகளையும் கேட்டுள்ளார்.
அதேபோல பாகிஸ்தானுடனான மேட்சிக்கு முன்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் அக்ஷார் படேல் இருவருக்கும் விருந்தளித்துள்ளார். தென்னாப்ரிக்கா போட்டிக்கு முன்பாகவும், ஜடேஜா மற்றும் ரெய்னாவுக்கு விருந்தளித்துள்ளார். தற்போது வரும் சனிக்கிழமை யுஏஇ உடன் இந்திய அணி மோத உள்ளது.
இந்நிலையில் துணைக் கேப்டன் விராட் கோலி மற்றும் பந்து வீச்சாளர் ஷமி ஆகியோருக்கு விருந்தளித்துள்ளார். தோனி இதன் மூலம் வீரர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றாராம்.
இவரின் இந்த முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது என்பது தான் உண்மை. தொடர்ந்து இதை ஃபாலோ பண்ணும் ஜடியவில் இருக்கின்றாராம் கேப்டன் தோனி.!! வாழ்த்துக்கள் கேப்டன்..!!
No comments:
Post a Comment