பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் இருப்பது போல, ஆண்களுக்கும் கருத்தடை ஏற்படுத்தும் மாத்திரைகள் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதற்காக இரண்டு விதமான சோதனைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சோதனை மூலம் தயாரிக்கப்படும் மாத்திரையானது, விந்தணுவின் வளர்ச்சியை பாதியிலேயே தடுத்துவிடும். இதனால் கருத்தரிப்பு நடைபெறாது என்று கூறப்படுகிறது.
அதே போல மற்றொரு ஆராய்ச்சியாளர் செய்துவரும் சோதனையால் தயாரிக்கப்படும் மாத்திரையானது, தற்காலிகமாக விந்தணு உற்பத்தியாவதைத் தடுக்குமாம்.
பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக நடத்தப்படும் இந்த ஆய்வில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு எந்த வித கருத்தரிப்பு ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இது விரைவில் மருந்தகங்களுக்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment