தெலுங்கு நடிகர் ராணாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் தமிழில், அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக இவரும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும், இருவரும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்கின்றனர் என்றும் கூறப்பட்டு வந்தது.
பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நடிகை த்ரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறி திருமண நிச்சயத்தார்த்தம் செய்துக்கொண்டார்.
தற்போது ராணாவுக்கும் புதிய காதலி கிடைத்துவிட்டார் என்று தெலுங்கு தேசத்தில் பேச்சாக கிடக்கிறது. அவர்தான் சமந்தா.. சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்.
சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டனர். சித்தார்த்தை பிரிந்த சமந்தா ராணாவை காதலிப்பதாக தெலுங்கு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே மறுக்கவில்லை.
No comments:
Post a Comment