Thursday, 26 February 2015

காக்கிசட்டை எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்.. எவ்வளவு நேரம் ஓடும்..?


சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது ’காக்கி சட்டை’ படம்.
இதுவரை காமெடி ட்ராக்கில் பயணித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக இப்படம் மூலம் ஆக்‌ஷனில் களம் இறங்கியுள்ளார். அதுவும் போலீஸ் அதிகாரியாக. நாளை வெளியாகும் இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய ஓபன்னிங் கிடைத்துள்ளது. இதுவரை எந்த சிவகார்த்திகேயன் படத்திற்கும் கிடைக்காத ஓபன்னிங் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 750 திரையரங்குகளில் ரிலிஸாக இருக்கிறதாம் இப்படம். அதில் தமிழகத்தில் மட்டும் 370 திரையரங்குகளிலும், கேரளாவில் 80, கர்நாடகாவில் 50, மற்ற மாநிலங்களில் 35, வெளி நாடுகளில் 215 என மொத்தம் 750 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது.
மேலும் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடுகிறதாம் காக்கி சட்டை படம்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான மான் கராத்தே 2 மணி நேரம் 37 நிமிடங்களும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 மணி நேரம் 31 நிமிடங்களும் ஓடக்கூடியதாக இருந்தன. இந்த இரண்டு படங்களைப் போலவே காக்கி சட்டையின் ரன்னிங் டைமும் அமைந்திருப்பதால், காக்கி சட்டை படம் விறுவிறுப்பாக இருக்கும் என் நம்பலாம்.

No comments:

Post a Comment