புலி படத்தைப் பற்றி ஏற்கெனவே பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. சிம்புதேவன் இயக்கிவரும் இப்படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சரித்திரக் கதையும், தற்போதைய சமூகக் கதையும் கலந்து ஒரு ஃபேன்டஸி படமாக உருவாகி இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரமான கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடந்து வருவதால் இந்தப் படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும், புகைப்படமும் இதுவரை வெளிவரவேயில்லை. அதையும் மீறி படத்தைப் பற்றி எதையாவது புதுப் புதுத் தகவல்களை யாரோ கிளப்பி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
“ஸ்ரீதேவி முத்தக் காட்சியில் நடிக்கப் போகிறார்” என தற்போது ஒரு புது தகவல் கிளம்பியுள்ளது. படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கும், ராஜாவாக நடிக்கும் சுதீப்புக்கும் இடையில்தான் அப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார்களாம். அதில் ஸ்ரீதேவி நடிப்பாரா இல்லை வேண்டாம் என்று சொல்லுவாரா என்பதுதான் தற்போதைகய கேள்வியாக எழுந்துள்ளதாம்.
No comments:
Post a Comment