Wednesday, 25 February 2015

உலகமே தடை செய்த மோசமான படம்: 2400 கோடிகளை வசூலித்து சாதனை..!


காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளிவந்த 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’(fifty shades of grey)படம் ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வசூல் மழையை பொழிது வருகிறது. இதனால் ஹாலிவுட் சினிமாவே கொஞ்சம் ஜெர்க்காகிதான் இருக்கிறது.
எரிகா மிட்சல் ஜேம்ஸ் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் டகோட்டா ஜான்சன், ஜாமி டோர்ணன், எலோய்ஸ் மம்போர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் டெய்லர், ஜான்சன் இயக்கி இருக்கிறார்கள்.
படத்தில் அதிகமான ஆபாசங்கள் இடம் பெற்றுள்ளதால் 60க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனப்போதிலும் ரிலீஸான இடங்களில் எல்லாம் வசூலை மழையை பொழிது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
வெறும் 40 மில்லியன் டாலர்களில் உருவான இப்படம் உலக அளவில் 400 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 2400) கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. யுஎஸ்ஸில் மட்டுமின்றி 50 வெளிநாடுகளிலும் இந்தப் படமே முதலிடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment