ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.
தற்போது மீண்டும் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ரோஹித் ஷெட்டி. இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபலமான 17 நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வௌியானது. இதை ஷாருக்கானும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, 17 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பது உண்மை தான். இந்த கதைக்கும் அப்படி ஒரு சூழல் உள்ளது. யார் யார் நடிக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேசி வருகிறோம். எல்லாம் முடிவான பிறகு முறையாக அறிவிக்கிறோம். மார்ச் 4 முதல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.
No comments:
Post a Comment