Tuesday, 24 February 2015

இந்த மூன்று ஆண்களின் முயற்சியை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..?


இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், கர்ப்பிணி பெண்களின் தோற்றத்திலான ஆடையை தொடர்ச்சியாக பல நாட்கள் அணிந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த ஆடையின் எடை சுமார் 15 கிலோகிராம் (33 இறாத்தல்) ஆகும். இவர்கள் திருமணமான ஆண்களாவர். நிறைமாத கர்ப்பிணிப் பெண்களின் கஷ்ட நிலையை ஆண்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் இந்த ஆடையை தாம் அணிந்துள்ளதாக இந்த ஆண்கள் கூறுகின்றனர்.
(மூன்று கர்ப்பிணி ஆண்களின் வீடியோ கீழே)
கர்ப்பிணி பெண்ணின் உடல் அமைப்பு தோற்றத்தில் பெரிய வயிறு, மார்பகங்களின் தோற்றத்திலான இந்த ஆடையை பல நாட்களுக்கு தாங்கள் தொழில்புரியும் இடத்திலும் வீட்டிலும் இவர்கள் அணிந்துள்ளனர்.
இரவு படுக்கும் போதும் இந்த ஆடையை அணிந்திருக்கும் இவர்கள், கழுவுவதற்காக மட்டுமே மேற்படி ஆடையை கழற்றுவதாக கூறுகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும் ஸ்பெய்னின் பார்ஸிலோ நகரிலுள்ள அலுவலகமொன்றில் ஒன்றாக பணிபுரிகின்றனர்.
(மூன்று கர்ப்பிணி ஆண்களின் வீடியோ கீழே)

No comments:

Post a Comment