Friday, 27 February 2015

அஜித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன இயக்குநர்கள்..!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுவும் ஒரு சில ரசிகர்கள் இது அஜித் படம் இல்லை கெளதம் மேனன் படம் தான் என்று சொன்னார்கள். காரணம் அஜித்துக்கான ஸ்டைல் படத்தில் மிஸ்ஸிங்க் என்று கூறினார்கள்.
ஆனாலும் படம் நல்ல வசூலை குவித்தாக பட தரப்பில் சொல்லப்பட்டது. பொதுவாகவே அஜித் எப்போதும் தன் படத்தின் திரைக்கதை பணியில் தலையிட மாட்டார் என்று இயக்குநர் கூறுவார்கள். படத்தின் கதையை கேட்பதோடு சரி, மற்ற அனைத்து வேலைகளையும் இயக்குநர் பார்வையிலேயே விட்டு விடுவார். சமீபத்தில் கெளதம் மேனன் கூட அதையேதான் சொன்னார்.
ஆனால், சில நாட்களாக தனக்கு முழுக்கதையை சொன்னால் தான் படத்தின் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று கூறியுள்ளாராம் அஜித். ஏனென்றால் முன்பு தான் இவர் கதை கேட்காமல் நடித்த பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது.
இதனால், இனி ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்ற கூடாது என்று, முழு கதையையும் தனக்கு சொன்ன பிறகு தான் ஷுட்டிங் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு முன்பு அஜித்தை வைத்து தாங்கள் நினைத்ததை சுதந்திரமாக எடுத்த இயக்குநர்கள் அஜித் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

No comments:

Post a Comment