சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் என்றும், அதில் மீண்டும் ரஜினி- ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தது.
மேலும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இப்படத்தில் வில்லன் கேரக்டருக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ரஜினியும், ஷங்கரும், அமீர்கானும் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி அமீர்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லையாம். அவர் ‘எந்திரன் -2’விலிருந்து விலகிவிட்டார் என்று அமீருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணமாம் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டாராம்.அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் ‘எந்திரன்-2’வை எடுத்து முடிக்க அதே காலயளவு எடுக்கப்படும் என்பதால் அமீர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர அமீரின் எதிர்கால புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் தானாம் இந்த முடிவாம்.
No comments:
Post a Comment