Tuesday, 24 February 2015

விஜய், சூர்யாவுக்கு மட்டும் ரெண்டு.. அப்போ அஜித்துக்கு மட்டும் ஒன்னா..?


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் முருகதாஸ். இவர் அஜித் நடித்த ’தீனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் என்பதை அனைவரும் அறிவர்.
முருகதாஸ் ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கபோவதாக தகவல்கள் வெளிவருகின்றன.சமீபத்திலும் அப்படிதான் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து வேற எந்த தகவலும் வெளியே வரவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை விஜய்யுடன் இரண்டு முறையும், சூர்யாவுடன் இரண்டு முறையும் இணைந்து பணியாற்றியுள்ள முருகதாஸ் அஜித்துடன் எப்போது இரண்டாவது முறையாக இணைவார் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வியை சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முருகதாஸிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முருகதாஸ், கதை ரெடியாகத்தான் இருக்கிறது. அஜித் ஓ.கே. என்றால் நானும் ரெடி தான். பொதுவாக நான் ஒரு படத்தை முடித்த பின்னர் அஜித்திடம் சென்று அடுத்தபடம் குறித்து பேசுவது உண்டு. ஆனால் அவர் வேறு ஏதாவது படங்களில் பிஸியாக இருப்பார், சில சமயங்களில் நான் பிஸியாக இருப்பேன்.
இப்படியே தள்ளி போய் கொண்டே போகிறது. நிச்சயம் நாங்கள் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம் என்றார். தற்போது கத்தி படத்திற்கு பிறகு பாலிவுட்டில், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் முருகதாஸ். இது தமிழில் வௌியான மௌன குரு படத்தின் கதை தழுவல் ஆகும்.

No comments:

Post a Comment