பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான வரும் 27ஆம் தேதி 6 படங்கள் வரை வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் 6 படங்கள் ரிலீஸாக இருப்பது திரையுலகினர் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் உலக் கோப்பை நேரத்தில் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி, ஏன் எந்த நடிகராக இருந்தாலும் சரி அவர்களுக்கு பெரிய சோதனையாக அமைந்துவிடும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் என்பது படங்களை ரிலீஸ் செய்ய ஏற்ற மாதம் அல்ல, என்பதுதான் திரையுலகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக இருக்கும்.
காரணம் இனிமேல் மாணவ, மாணவிகளுக்கு பரீட்சை ஆரம்பித்துவிடும் என்பதால் தியேட்டரில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. அதோடு ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் புதிய படங்களை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது. மார்ச் மாதமே பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன.
இதனிடையே பிப்ரவரி மாத்த்தின் கடைசி வெள்ளிக்கிழமையான வரும் 27ஆம் தேதி 6 படங்கள் வரை வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள 'காக்கி சட்டை', ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி நடித்துள்ள 'எட்டுத் திக்கும் மதயானை', மகேஷ், அனன்யா நடித்துள்ள 'இரவும் பகலும்', அருண், விஜய், கோபிகா, சுமி, ரிச்சா மற்றும் பலர் நடித்துள்ள 'சொன்னா போச்சு', பிரஜன், தனிஷ்கா மற்றும் பலர் நடித்துள்ள 'மணல் நகரம்', 'பசங்க' கிஷோர், ஸ்ரீராம், பாண்டி நடித்துள்ள 'வஜ்ரம்', ஆகிய ஆறு படங்கள் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment