வனவிலங்குகளை வேட்டையாடியது மற்றும், ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு, ஜோத்பூர் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், இதற்காக வைத்திருந்த லைசன்ஸ் காலாவதியானதாகவும் தொடரப்பட்ட அப்போது, சட்டவிரோதமாக ஆயுதங்களை அவர் பயன்படுத்தியதாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
இந்த நிலையில், தீர்ப்பை வரும் மார்ச் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். முன்னதாக, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, சல்மான் கான், கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment