சினிமாத் துறையில் தாக்குப்பிடிப்பது கடினமானது எனவும் இதற்கு திடநம்பிக்கையும் விடாமுயற்சியும் அவசியம் எனவும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) கூறியுள்ளார்.
இலங்கையரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்த "ரோய்" திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதன்பின் அவர் அளித்த பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
"இத்துறையில் எவரேனும் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் அவர் தனது பணியில் கவனத்தை குவிப்பது அவசியம். அதுவும் குறிப்பாக ஒரு வெளி நபராக இருந்தால் இது முக்கியமானது. நான் முதலில் நடிக்க வந்தபோது, இது வேடிக்கையும் சுவாரஷ்யமும் கொண்ட ஒரு தீரச்செயலாக இருக்கும் எனக் கருதினேன்.
பின்னர் இதுவே எனது வாழ்க்கையில் நான் தேர்வுசெய்யும் தொழில் என்பதை உணர்ந்தேன். இதில் நான் கவனம் செலுத்தாவிட்டால் நான் எதையும் அடையப்போவதில்லை" என்றார். விக்ரம்ஜித் சிங் இயக்கிய "ரோய்" திரைப்படத்தில் அர்ஜுன் ராம்போல், ரன்பீர் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியல் அதிக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் 10.40 கோடி இந்திய ரூபாவை வசூலித்திருந்தது.
No comments:
Post a Comment