ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியானவர், எத்தனை டேக் எடுத்தாலும் பொறுமையாக இருப்பார், டெக்னீசயன்களிடம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார் என்று திரையுலகினரால், பாராட்டப்படுப்பவர் தமன்னா. தற்போது தமிழிலும், தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்தார் தமன்னா. அங்கு தமன்னா பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்க பட்டது. இதற்காக பல பெண் மாடல்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அழகு தேவதைகளாக வந்திறங்கிய மாடல்களுடன் அவர்களது பாய்பிரண்ட்கள் பலரும் வந்திருந்தனர்.
வெளிப்புற படப்பிடிப்பு என்றுகூட பார்க்காமல் ஓய்வு நேரத்தில் அவர்கள் ஜோடி ஜோடியாக நின்றுகொண்டு சேட்டையில் ஈடுபட்டனர். இதை கண்டும் காணாமல் இருந்தார் தமன்னா.
ஆனால் அந்த ஜோடிகள் வரம்பு மீறியதால் கோபம் அடைந்த தமன்னா, ‘வெளிப்புற படப்பிடிப்புக்கு வந்து இதுபோல் அநாகரீகமாக நடந்துகொள்வது முறையல்ல. நீங்கள் ரொமான்ஸ் செய்வதென்றால் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சீறிப் பாய்ந்தார்' .
இதில் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகிகள், ' தமன்னா தனது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவரிடம் இதை சொல்லி வையுங்கள் என்று இயக்குநரிடம் முறையிட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment