கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என அமெரிக்க இலத்திரனியல் நிறுவனங்கள் புதுப்புது கருவிகளை தயாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அணியப்படக்கூடிய தக்காளி இயந்திரத்தை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ககோம் (Kagome) எனும் மரக்கறிச்சாறு தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்த இந்த தக்காளிச்சாறு இயந்திரத்தை தோளில் சுமந்துகொண்டு செல்லலாம். இந்த இயந்திரத்துக்கு டொமாட்டன் (Tomatan) என பெயரிடப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான 6 தக்காளிகளை சிறிய மனித ரோபோ போன்ற இந்த இயந்திரத்துக்குள் வைத்திருக்க முடியும்.
(வீடியோ கீழே)
இயந்திரத்திலிருந்து வெளிவரும் தக்காளிச் சாறு ஓட்டவீரர் உண்பதற்கு வசதியாக வாய்க்கு நேராக பிடித்துக்கொள்ளக்கூடியதாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
எதிர்வரும் டோக்கியோ மரதன் ஓட்டப்போட்டியின் போது வீர, வீராங்கனைகளுக்கு வலுவூட்டுவதற்கு இந்த அணியப்படக்கூடிய இயந்திரம் உதவும் என ககோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"விளையாட்டு வீரர்களின் களைப்பை போக்குவதற்கு உதவும் பல சத்துக்கள் தக்காளியில் உள்ளன" என ககோம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷிகெனோரி சுஸுகி தெரிவித்துள்ளார்.
(வீடியோ கீழே)
No comments:
Post a Comment