Friday, 27 February 2015

உ.கோ., 2015: ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிர வைத்த நியூசி-ஆஸி போட்டி!!


உலகக் கோப்பை போட்டியின் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய போட்டி இதுதான் என்று கூறலாம். ஒருவழியாக போராடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
2015 உலகக் கோப்பை போட்டியின் 20வது லீக் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
நியூசியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆஸி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதனால் அந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேடின் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
152 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியான ஆட்டத்துடன் தொடங்கியது. 3.5 ஓவர்களிலேயே 40 ரன்கள் அடித்தது அந்த அணி. எனினும், 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சை சமாளிக்க திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர்.
கேன் வில்லியம்ஸன் ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுபுறம் மலமலவென விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கடைசி நேரத்தில் அந்த அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றபோது, அந்த அணி அடுத்தடுத்த பந்தில் விக்கெட்டை விட ஆஸி அணி வென்று விடுமோ என்ற எண்ணமே அனைவரிடமும் இருந்தது.
22.5வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் தடுத்தாடி அணியின் வெற்றிக்கு ஒரளவு நம்பிக்கை கொடுத்தார், பந்துவீச்சாளரான பவுல்ட். பின்னர் 23 வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் கேன் வில்லியம்ஸன்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசி வென்று விடும் என்று அனைவரும் நினைத்தாலும். நியூசியின் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு ஆஸிதான் வெற்றி பெரும் என்ற எண்ணத்தினை உருவாக்கியது. சுமார் நான்கு உலகக் கோப்பை தொடர்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸியின் ஸ்டார்க் அபாரமான பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் பவுல்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment