Thursday, 26 February 2015

இந்த Lamborghini ஸ்மார்ட்ஃபோன் விலை ரூ. 4 லட்சமாம்!!?


பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது புதிய டோனினோ லம்போர்கினி 88 டவ்ரி என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டுள்ளது.
இதன் விலை எவ்வளவு தெரியுமா?? இந்திய மதிப்பு ஏறக்குறைய ரூ. 4 லட்சங்கள் ஆகும்.
இது மூன்று வித கலர்களில் வருகின்றது. மேலும் இதன் மெபைல் பேனல் ஆனது முழுக்க முழுக்க லெதரால் செய்யப்பட்டது.
ஸ்கிராச் ரெசிஸ்டண்ட் பாதுகாப்புக் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே.
2.3GHz ப்ரோசஸருடன் 3GB ராம் கொண்டு செயல்படுகிறது.
64GB உட்புற நினைவகத்தையும், மெமரி கார்டு இணைத்துக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது.
20 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ளது.
இதில் டுயல் சிம் இணைக்கும் வசதி உள்ளது.
லம்போர்கினி காரை போலவே இந்த ஸ்மார்ட்ஃபோனும் ஆடம்பரப் பிரியர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது என்றே கூறலாம். இதன் தோற்றமும், லம்போர்கினி காரின் முன்பக்க அமைப்பு போலவே இருக்கின்றது.

No comments:

Post a Comment