‘டீ’ கடைகள் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ‘டீ’ கடைகள் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது.
முழுக்க முழுக்க ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ அஞ்சல’. இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது. Yamaha ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள். பசுபதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்’ முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ’ கடை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அனைவரையும் கவரும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் பொழுது போக்கு பாடமாக வருகிறது ‘ அஞ்சல’.
தனது ஃபார்மர்’ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன் சார்பில் திலிப் சுப்புராயன் இப்படத்தை தயாரிக்கிறார். " ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்.
திலிப் சுப்புராயன் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.” “சூப்பர் சுப்புராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள ஒளிப்பதிவாளர்கள் KV குகன் மற்றும் சௌந்தர்ராஜன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய , பிரவின்.K.L படத்தொகுப்பை கையாள,M.G.முருகன் கலை இயக்கத்தை கவனிக்க, வெற்றி படங்களான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இவரது இசை படத்துக்கு பெரிய பலம். ‘அஞ்சல’ திரைப்படத்தின் இசை அனைவரையும் கவரும். நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல’. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன்.
No comments:
Post a Comment