ஆரம்ப கால மனிதர்களிடையே செயலறிவு வளர்ச்சியடைவதற்கு முன்னர் பல மில்லியன் வருட காலத்திற்கு முன்னர் அன்பும் கருணையும் வளர்ச்சியடைந்துள்ளமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் உதவி வந்துள்ளனர். இத்தகைய உணர்வுகளானது பின்னர் மதிநுட்பமும் காரணம் கூறும் திறனும் பரிணாம வளர்ச்சியடைய உதவியதாக கூறப்படுகிறது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் குழந்தைகளின் முகங்களைப் போன்ற வடிவமைப்புடைய கூழாங்கற்களை தம்முடன் கொண்டு சென்றதுடன் சிறப்பு தேவையுடையவர்களை பராமரித்து வந்துள்ளமைக்கான சான்றுகள் தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெனிஸ் பிகின்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.
ஆரம்ப கால மனிதர்களிடம் மொழி திறமைகளும் மதிநுட்பமும் 500,000 ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியடைந்ததாக மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment