Wednesday, 25 February 2015

சொல்லி அடிக்கும் கில்லி!! கெஜ்ரிவால் ஹூரோ ஆஃப் டெல்லி!!


டெல்லியில், இரண்டாவது முறையாக முதல்வராகப் பதிவியேற்ற கெஜ்ரிவால், தேர்தலுக்கு முன் சொன்ன படி, மின்சாரக் கட்டணத்தை பாதிக்கு பாதியாக குறைத்து, வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
டெல்லி சட்ட சபைத் தேர்தலில், எதிர்பாராத விதமாக மாபெரும் வெற்றி பெற்று, கடந்த 14ம் தேதி டெல்லி முதல்வராக பதவியேற்றார், கெஜ்ரிவால்.
இவர் பிரச்சாரம் செய்யும் போது, நியாயமான, டெல்லி மக்களுக்கு பயன்படக்கூடிய நலத் திட்டங்களை செய்வதாக உறுதியளித்தார். டெல்லியில், மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்பதும் அதில் ஒன்று.
ஆனால், இந்த மின்கட்டணக் குறைப்புக்கு கெடுபிடி இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அந்த தடைகளை மீறி டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் 50% குறைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் கெஜ்ரிவார்ல்.
இது குறித்து, துனை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் 400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கான கட்டணத்தில் 50% குறைக்கப்படும்.
இது மார்ச் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதால், டெல்லியில், 90% பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கெஜ்ரிவாலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை அடுத்து, டெல்லியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது, ஆம் ஆத்மி.
இதற்கு முன் கெஜ்ரிவால் பதவியேற்ற போது, டெல்லி முழுவதும், இலவசத் தண்ணீர் திட்டத்தை கொண்டுவந்தார். ஆனால், அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததும், இலவசத் தண்ணீர் திட்டம் மூழ்கிவிட்டது.
இந்நிலையில், இந்த இலவசத் தண்ணீர் திட்டமும், கூடிய விரைவிலேயே திரும்பக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment