Thursday, 26 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 27)


பிப்ரவரி 27
2002
குஜராத்தில் இந்து முஸ்லீம் கலவரத்துக்குக் காரணமான இரயில் பெட்டி எரிப்பு நடந்த தினம்!!
இந்தியாவில் நடந்த மிகப் பெரிய இந்து முஸ்லீம் கலவரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அயோத்தி தொடர்வண்டிப் பெட்டி எரிக்கப்பட்ட தினம் இன்று.
2002ம் ஆண்டு இதே தினத்தன்று, அயோத்தியிலிருந்து, திரும்பிக் கொண்டிருந்த 57 இந்துப் பயணிகளை கோத்ரா என்ற இடத்தில் வைத்து முஸ்லீம்கள் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 14 குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் அயோத்தியில் பெரும் கலவரம் வெடித்தது.
முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களுக்கிடையில் நடந்த இந்த கலவரத்தில் சுமார், 1000 பேர் வரை இறந்ததாக இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Congress Research Service (CRS) தகவலின் படி இவ் வன்முறையில் 3000 க்கும் அதிகம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதை இந்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த கலவரத்தில் பெரும்பாலும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாகவும், வன்முறைக்கு இந்துத் அரசியல் தலைவர்கள் மறைமுக ஆதரவு அளித்ததாகவும், தொலைகாட்சி ஒன்று பகிரங்கமாக நிரூபித்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அங்கு ராமர் கோயில் கட்ட முயன்றமையே இக்கலவரத்திற்கு முக்கியக் காரணம். மேலும், ரயில் பெட்டி எரிப்பு உட்பட இந்த கலவரத்தை முழுவதுமாக செய்ததே இவ்வமைப்பு தான் என்ற சந்தேகமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1700 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1951 - ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
2007 - மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
இன்றைய தினம்
சர்வதேச போலார் கரடி நாள்
சுதந்திர தினம் - டொமினிக்கன் குடியரசு
வியட்நாம் டாக்டர் தினம் - வியட்நாம்

No comments:

Post a Comment