Thursday, 26 February 2015

மேடையிலேயே மல்லாக்க விழுந்த மடோனா…!! வீடியோ..!!


சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்காக ஆண்டு தோறும் 'பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி' எனும் அமைப்பு 'பிரிட் விருது' வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள 'ஓ2 அரேனா' எனும் அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாப் பாடகி மடோனா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிறந்த பெண் பாப் இசைக் கலைஞர் பிரிவில் மடோனா வென்றிருக்கிறார்.
கடைசியாக 1995ம் ஆண்டில் இதே பிரிட் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி நடத்தினார். அதன்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகி மடோனா கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மடோனா டான்ஸ் வீடியோ கீழே)
இந்த நிகழ்ச்சியில் மடோனா மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார், இதற்கு காரணம் அவர் அணிந்திருந்த கோட். கேப் கோட்டை அணிந்திருந்த மடோனா மேடையில் பாடியவாறே நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் இணைந்து நடனமாடிக்கொண்டிருந்த சக நடன நடிகர், அவர் அணிந்திருந்த கேப் கோட்டை பிடித்து இழுத்தார்.
அவ்வாறு இழுக்கும் போது மடோனாவின் உடலிலிருந்து அந்த கோட் நழுவியிருக்க வேண்டும். ஆனால் அந்த கோட்டை மடோனா இறுக்கமாக கட்டியிருந்ததால், அது நழுவாமல் போனதுடன் அவரும் கீழே விழுந்தார்.
இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அவர், தனது "லிவிங் பார் லவ்" என்ற பாடலை அற்புதமாக பாடியதுடன், நடனமாடியும் அசத்தினார்.
(மடோனா டான்ஸ் வீடியோ கீழே)

No comments:

Post a Comment