Wednesday, 25 February 2015

ரூ. 1,699-ல் பறக்கலாம்: Spicejet-ன் சிறப்பு சலுகை…!!


சன் குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மலிவு விலை டிக்கேட்டுகளை அறிவித்துள்ளது. அதுவும் 100 இல்லை, சுமார் 1 லட்சம் டிக்கெட்டுகள் மலிவு விலைச் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த மலிவு விலைச் சலுகை வெளி நாடுகளுக்கும் பொருந்தும் என்பது தான் சிறப்பு. இந்த சிறப்பு சலுகையின் படி, ஸபைஸ்ஜெட் விமானத்தில், இந்தியாவிற்குள் பறப்பதற்கு 1,699 ரூபாயும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பறப்பதற்கு சுமார் 3,799 ரூபாயும் என குறைக்கப்பட்டுள்ளது.
கலர் தி ஸ்கை
ஹோலியை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள இச்சலுகைக்கு "கலர் தி ஸ்கை" என்று பெயரிட்டுள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இந்த சிறப்பு கட்டண சலுகை பிப்ரவரி 26ம் தேதி வரை நீடிக்குமாம்.
இந்த சலுகை மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுளின் பயண நாள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 20 வரை இருக்கலாம் என்று ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. மொத்தம் 1 லட்சம் டிக்கெட்டுகளை இந்த ”கலர் தி ஸ்கை” சலுகை மூலம் வழங்கப்பட உள்ளது.
எதுக்கு இந்த சலுகை
ஸ்பைஸ் ஜெட்டின் தலைமை வர்த்தக அதிகாரி கனிஷ்வரன் அவிலி கூறுகையில், ஹோலிக்காக, மக்கள் இடம்பெயருவது வழக்கம், இந்நிலையில் இந்த குறைந்த கட்டண சலுகை, புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதுடன், பழைய வாடிக்கையாளர்களையும் மகிழ்வுறச் செய்வதாக அமையும். என்று கூறியுள்ளார்.
எங்க இருந்து எங்க…?
ஸ்பைஸ்ஜெட் மூலம் குறைந்த பட்சம், 1,699 ரூபாயில் இந்தியாவுக்குள் பயணம் செய்யலாம்.
அதாவது, ஹைதெராபாத்-விஜயவாடா, டெல்லி-டேராடூன், கவுகாத்தி-கொல்கத்தா, அகமதாபாத்-மும்பை, பெங்களூரு-ஹைதெராபாத் ஆகிய ரூட்களுக்கு ஸ்பைஸ்ஜெட் மூலம் பயணம் செய்ய பயண கட்டணம் வெறும் 1,699 ரூபாய் மட்டுமே.
இது தவிற இந்தியாவிற்குள் செல்லும் அனைத்து ரூட்களுக்கும் சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதே போல், நேபாளத் தலைநகர் கட்மாண்டு வழியாகச் செல்லும் வெளிநாட்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு பயணக் கட்டனம் 3,799 ரூபாய் தானாம்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பயண கட்டணம் குறைந்த பட்சம் 3,799-ல் இருந்து தொடங்குகிறது.
இந்த சலுகை எப்படி..??
அதாவது சென்னையில் இருந்து மும்பை பயணக்கட்டனம் 2,300 ரூபாய் மட்டுமே. சாதாரனமாக சென்னை-மும்பை செல்வதற்கான பயணக்கட்டனம் சுமார் 5000த்தை எட்டும்.
ஆக, இந்த சிறப்பு சலுகை மூலம் கட்டணம் கிட்டத் தட்ட பாதி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தச் சலுகை ஏற்றுக் கொள்ளக் கூடிய, பயணிகளுக்கு லாபகரமான ஒரு சலுகை தான்.

No comments:

Post a Comment