Wednesday, 25 February 2015

துரோகிகளுக்கு பிரியாணி விருந்தா..? ஆத்திரத்தில் ரஜினி ரசிகர்கள்..!


விஜய் மீது அடங்காத ஆத்திரத்தில் இருக்கிறார்களாம் ரஜினி ரசிகர்கள். லிங்கா படம் பிரச்சினை பற்றி நாங்கள் ஏற்கனவே பல செய்திகளை வெளியிட்டுள்ளோம்.
சமீபத்தில் லிங்கா நஷ்ட ஈடு பிரச்சினையில் ரஜினி தலையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாகவும் மிரட்டல் விடுத்தனர் விநியோகஸ்தர்கள். இதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்தது.
கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். இந்த நிலையில்தான் இரண்டு பிரபல நடிகர்கள்தான் ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்க கூடாது என தடுக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியானது. அந்த இரண்டு நடிகர்கள் விஜய், சரத்குமார் என்ற ஒரு பேச்சும் அடிப்பட்டது.
இது குறித்து விஜய் தரப்பினர் "விஜய்க்கும் 'லிங்கா' பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை" என்று மறுத்தார்கள். ஆனால்அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. அதில் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சிங்காரவேலனும் விஜய்யும் நெருக்கமாக இருக்கின்றனர். இதனால் விஜய் தான் விநியோகஸ்தர்கள் பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் இந்த புகைப்படம் குறித்து சிங்காரவேலன் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் விஜய்யை சந்தித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவர்கள் சந்தித்து என்ன பேசிக்கொண்டனர் என்ற சில தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
சமீபத்தில் விஜய் புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் என்பது அனைவரும் தெரியும். ஆனால் தெரியாத விஷயம் இந்த விருந்துக்கு சிங்காரவேலன் தலைமையிலான கோஷ்டியையும் விஜய் அழைத்திருந்தார் என்பது தான்.
பிரியாணி விருந்துக்கொடுத்ததோடு விருந்தைப் பரிமாறும் வேலையையும் தானே செய்த விஜய், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே “ உங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்னு நான் எங்கப்பா சொன்னேன்,” என்று சிரித்துக் கொண்டே கேட்க, “நாங்கள் ரெண்டு பெரிய ஹீரோக்கள்னு தான்னு சொன்னோம்,உங்களையும் சரத்குமாரையும் சொல்லல,” என்று பதிலுக்கு சிங்காரவேலனும் சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
இந்தப் பிரச்சனையால் எங்களுக்கு யாரும் படம் தர மாட்டார்கள் போலத்தெரிகிறது என சிங்காரவேலன் கூற, ‘அப்படியெல்லாம் இல்லங்கண்ணா, ‘புலி’ படத்தின் திருச்சி வினியோக உரிமையை வேண்டுமானால் நீங்க வாங்கிக்கங்கண்ணா,” என்று விஜய்யும் பதிலுக்கு சொல்ல உடனே தன்னுடைய பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமாரை கூப்பிட்டு ‘புலி’ படத்தின் திருச்சி ஏரியாவை சிங்காரவேலனுக்கே கொடுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்களோ சக நடிகர் ஒருவரை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்காங்க..? அவங்களுக்கு போய் விருந்து வைத்து சப்போர்ட் பண்றாரே... என்று அடங்காத ஆத்திரத்தில் இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment