Thursday, 26 February 2015

தல ஸ்டைல்ல சொல்லணும்னா.. இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்.. அஜித்தா, விஜய்யா..?


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காக்கி சட்டை படம்.
முதன் முறையாக காமெடி டிராக்கை விட்டு ஆக்‌ஷனுக்கு களம் இறங்கியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் கைக்கொடுத்ததா..? இல்லையா..? என்று இன்று மாலை தெரிந்துவிடும்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ‘‘தல ஸ்டைல்ல சொல்லணும்னா.... இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்’’ என வசனம் பேசியிருப்பார். கடந்த மாதம் வெளிவந்த இந்தப் படத்தின் டிரைலரிலும் இந்த வசனம் இடம் பெற்றது. இதற்கு அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் சிவகார்த்திகேயன் அஜித்தின் தீவிர ரசிகர் என்றொரு பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் கூறியதாவது‘‘கட்அவுட், பாலாபிஷேகம்லாம் பண்ற அளவுக்கு நான் யாரோட மிகப்பெரிய ரசிகன், வெறியன் அப்படின்னு சொல்லணும்னா அது ரஜினி சாரைத்தான் சொல்லுவேன். அதுக்கப்புறம் எனக்கு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேரையுமே ரொம்பவும் பிடிக்கும்.
எந்தவிதமான பேக்ரவுண்ட்டும் இல்லாம தன்னம்பிக்கையோட அஜித் சார் ஜெயிச்சார்னா, ஒரு வாய்ப்புக் கிடைச்சா அதை எப்படி பயன்படுத்தி முன்னேறணும்னு விஜய் சார் காட்டிட்டார். அதோடு இவங்க ரெண்டு பேருமே இத்தனை உயரத்துக்கு வந்ததுக்கப்புறமும் நேர்ல சந்திச்சோம்னா எந்தவித பந்தாவும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருப்பாங்க.
இதுனாலயே நான் இவங்களோடு ரசிகனா மாறிட்டேன். அதோடு எனக்கு இவங்க பெரிய ரோல் மாடலும் கூட என்றார். மேலும் ‘காக்கி சட்டை’ படத்துல அஜித் சார் டயலாக் மட்டுமில்ல... விஜய் சார் டயலாக்கும் இருக்கு!’’ என்றும் கூறினார்.

No comments:

Post a Comment