Friday, 27 February 2015

ஒரு கோடியா? ரெண்டு கோடியா?.. சல்மான் கானால் 200 கோடி நஷ்டமாம்..?


பாலிவுட் நடிகரான சல்மான் கானால் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 200 கோடிவரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், இதற்காக வைத்திருந்த லைசன்ஸ் காலாவதியானதாகவும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கிற்கு ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பை வரும் மார்ச் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். ஜவ்வாக இழுந்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கு சல்மான் கானுக்கு எதிராக முடிந்தால் பாலிவுட் திரையுலகிற்கு 200 கோடி வரை நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சல்மான் கான் தற்போது பஜ்ரங்கி பைஜான், பிரேம் ரத்தன் தான் பாயோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒருவேலை சல்மான் கானுக்கு எதிராக வழக்கு முடிந்து அவர் சிறைக்கு சென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு 150 கோடி வரை நஷ்டம் ஏற்படுமாம். அதுமட்டுமல்லாமல் சல்மான் கான் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக கையெழுத்து போட்டிருக்கிறாராம். இதனால் இந்தப் படத்திற்கும் 50 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment