2015 உலகக் கோப்பை போட்டித் தொடர் ஆஸி மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இன்று ஆஸி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடும் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என்பதும், தொடர் வெற்றியை யார் தக்க வைக்கப் போகிறார்கள் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் ஒன்றாக இருக்கும். இரு அணிகளுமே இதுவரை விளையாடிய போட்டிகள் எதிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸி அணிக்கு நியூசிலாந்து அணி வீரர்களின் பவுலிங்கை சமாளிப்பது பெரிய சவாலாக இருந்தது. சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹேடின் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். நியூசி அணியில் பவுல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி மற்றும் விக்டோரி தலா 2 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 152 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
மேலும், இன்று பெர்த்தில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் யுஏஇ அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி 12 மணி அளவில் ஆரம்பிக்கப்படும்.
No comments:
Post a Comment