சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் வரும் 27 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் காக்கி சட்டை. இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசல் என்றும் அதனால் தான் சமீபத்தில் நடந்த காக்கி சட்டை ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட தனுஷ் வரவில்லை என்றும் செய்திகள் நாலாமூலைக்கும் சிதறியது.
இது குறித்து சிவகார்த்திகேயன் எனக்கும் தனுஷ் சாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, அவர் படம் தொடர்ப்பான அனைத்து வேலையும் எங்களையே நம்பி ஒப்படைத்துவிட்டார். அதனால் தான் அவர் வரவில்லை என்று விளக்கம் கொடுத்தார். இருந்தாலும் அதை காதில் வாங்காது சில பத்திரைக்கையாளர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருப்பதாகவே கூறிவந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் மனம் திறந்த சில விஷயங்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து நான் இசையமைத்த 'காக்கி சட்டை' படம் வெளியாக இருக்கிறது. அப்புறம் எப்படி சண்டை இருக்கும்? 'எதிர் நீச்சல்' நேரத்திலேயே இப்படியான வதந்திகள் வரும் என்று நினைத்தோம். சிவகார்த்திகேயனுக்கு 2 படங்கள் வெளியானதற்கு பிறகு இந்தப் பிரச்சினை தொடங்கி இருக்கிறது.
உண்மையாகவே அப்படி ஒரு பிரச்சினையே கிடையாது. ஒருவருடைய வளர்ச்சி இன்னொருத்தருக்கு சந்தோஷத்தைதான் கொடுத்திருக்கிறது. தனுஷ் சார் வராமல் இருந்தது, ஏற்கெனவே பேசி வைத்து நடந்ததுதான். இப்போது சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய ஸ்டார். அவருக்கு யாருடைய உறுதுணையும் இப்போது தேவையில்லை.
தனுஷ் சார் இப்போது வந்து பேசினார் என்றால் சிவகார்த்திகேயன் அவ்வளவு தான், அப்புறம் தனுஷ் சார் பற்றியே எல்லோரும் பேசுவார்கள், அது சிவாவின் வளர்ச்சியைதான் குறைவாக்கும். அதனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்காக தோள் கொடுத்தவர், இப்போது வளர்ந்த பிறகு சற்றே தள்ளி நின்று மகிழ்கிறார்.
தனுஷின் இந்த அணுகுமுறை உண்மையில் சிவாவுக்கு நெகிழ்வான ஒன்றுதான். இருவரது நட்பிலும் தெளிவாகத் தெரிவது முதிர்ச்சிதானே தவிர விரிசல் அல்ல" என்று கூறியுள்ளார் அனிருத்.
No comments:
Post a Comment