Wednesday, 25 February 2015

ஓடும் ரயிலிலும் இனி சுடச்சுட பீட்சா டெலிவரி!!


இந்திய ரயில்வே துறை பீட்சா பிரியர்களுக்காக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகள் இனி ஓடும் ரயிலிலும் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இந்திய ரயில்வே துறை டோமினோஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் தொலைபேசியில் தங்களுக்கு விருப்ப பீட்சாவை ஆர்டர் செய்து தங்களின் இருக்கை விவரங்களை கூறிவிட்டால் போதும். அடுத்த ஸ்டேஷனில் உங்களின் பீட்சா சூடாக தயார். உங்களின் இருக்கைக்கே வந்து தரப்படும்.
முதல் கட்டமாக இந்த வசதியினை ஆக்ரா, அல்வார், ஜலந்தர், மதுரா, வாபி, மற்றும் வதோரா உள்ளிட்ட ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment