2015ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து அணி வீரர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது வரை, எந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் இருக்கின்றார்கள் என்பதைக் காணலாம்.
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள்:
கிறிஸ் கெய்ல்(வெ.இ) – 3 ஆட்டங்களில் 13 பவுண்டரி மற்றும் 17 சிகசர்களுடன் 255 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.
ஷிகர் தவான்(இந்தி) – 2 ஆட்டங்களில் 23 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 210 ரன்கள் எடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார்.
சாமுவேல்ஸ்(வெ.இ) – 3 ஆட்டங்களில் 16 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 192 ரன்கள் எடுத்து மூன்றாமிடத்தில் இருக்கின்றார்.
முதல் மூன்று பவுலர்கள்:
சவுதி(நியூசி) – 3 ஆட்டங்களில் 111 ரன்கள் கொடுத்து 11 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
ஜெரோம் டெய்லர்(வெ.இ) – 3 ஆட்டங்களில் 124 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாமிடத்தில் இருக்கின்றார்.
ஃபின்(இங்கி) – 3 ஆட்டங்களில் 146 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் எடுத்து மூன்றாமிடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment