அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனைவிமார்கள் அல்லது கணவன்மார்களுக்காக புதிய விசாவை அறிமுகம் செய்கிறது அமெரிக்க அரசு.
எச் 1 பி விசா வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ’எச் 1 பி’ விசா வாங்குகிறது அமெரிக்க அரசு.
இந்த விசா வைத்திருப்பவர்கள் குடியேறிகளாகக் கருதப்படுவதில்லை. அதோடு, இந்த எச் 1 பி விசா, வைத்திருப்பவர்களது மனைவி அல்லது கணவனை அமெரிக்காவில் தங்க வைத்து பணியாற்றவும் அனுமதி கிடையாது.
இந்த எச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கோரிக்கை இந்த ’எச் 1 பி’ விசாவால், திருமணமான பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனால், வெளிநாட்டிலிருந்து பணியாற்றி வந்த தென் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் துனைவியரையும் அழைத்து வந்து பணியாற்றுமாறு வசதி செய்து தருமாறு நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.
புதிய விசா தற்போது இந்த கோரிக்கையை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டது. இதன் படி, எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி அல்லது கணவனுக்கு ‘எச் 4’ என்ற புதிய விசா வழங்கப்படும்.
இந்த ‘எச் 4’ விசா மூலம் அமெரிக்காவில் தங்கி அவர்கள் வேலை தேடலாம், அல்லது நிரந்தரமாக அமெரிக்காவிலேயே இருக்கலாம். இந்த வருடம் மே மாதம், 26ம் தேதி முதலே இந்த புதிய விசாக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 1.74 லட்சம் பேர், இந்த புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் ஆண்டுகளில் சுமார் 55 ஆயிரம் பேர் இந்த புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்க அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த புதிய விசா திட்டத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
No comments:
Post a Comment