தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவாவுடன் நடிக்க மாட்டேன் என்று தெறித்து ஓடிவிட்டாராம் நயன்தாரா. முகமூடி, நீதானே என் பொன் வசந்தம், யான் என தொடர் தோல்விகளை கொடுத்ததால் ஜீவாவின் மார்க்கெட் துவண்டு கிடக்கிறது. இதனால் ஜீவாவை வைத்து படம் எடுக்க யாருமே முன்வரவில்லை.
இதனால் நடிகர் ஜீவாவே ஒரு அதிரடி திட்டம் போட்டுள்ளார். அதாவது சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக வேலைபார்க்கும் செந்தில் என்பவரது பெயரில் தானே படத்தைத் தயாரித்து நடிக்கிறாராம் ஜீவா. இந்தப் படத்தை கருணாஸை வைத்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார்.
சமீபத்தில் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடித்தால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அவர் நடிக்க மறுத்ததால் இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவை கமிட் பண்ணி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment