Wednesday, 25 February 2015

அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுதானாம்...?


’என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், வீரம் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
ஒவ்வொரு நாளும் இந்தப் படத்தின் தகவல்கள் குறித்து அஜித் ரசிகர்கள் ஆவலாக எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக இந்தப் படம் குறித்து சில தகவல்கள் பரவி வருகிறது.
முதலில் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிபார்க்கப்படுகிறது. மேலும் அஜித்துடன் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறாராம். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 8 வருடங்கள் பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் ஜி.வி.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது. சமீபத்திய அஜித் படங்களைப் பொறுத்தவரை படப்பிடிப்பு வேலைகள் முடியும் வேளையில்தான் அப்படத்திற்கான டைட்டில் என்ன என்பதையே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே பல்வேறு தலைப்புகள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கும்.
அப்படி தற்போது இப்படத்திற்கு வைத்திருப்பதாக கூறப்படும் டைட்டில் ‘அச்சமில்லை’. இதனை அஜித்தின் விக்கி பக்கத்திலும் ரசிகர்கள் பதிவேற்றியிருக்கிறார்கள். இது அதிகாரபூர்வ தலைப்பா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே பாலசந்தர் இயக்கத்தில் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தலைப்பில் ஒரு படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment