மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த படம் ’த்ரிஷயம்’. இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிவருகிறது.
இதில் கமல்ஹாசன், கெளதமி நடித்து வருகின்றனர். தற்போது இப்படம் இந்தியிலும் ரீ-மேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஆனால் 2 குழுந்தைகளுக்கு அம்மாவாக நடித்த மீனா கேரக்டரில் யார் நடிக்கிறார் தெரியுமா..? நடிகை ஸ்ரேயா தானாம்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி முதலானோருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவுக்கு சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் கன்னடம், தெலுங்கு பக்கம் போன ஸ்ரேயாவுக்கு இப்போது ‘த்ரிஷயம்’ இந்தி ரீ-மேக்கில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படத்தில் இந்த கேரக்டர் முக்கியமானது என்பதால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ரேயா. ஆனால் இவ்வளவும் சீக்கிரம் ஸ்ரேயா அம்மா கேரக்டருக்கு நடிக்க வருவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லையாம்..
No comments:
Post a Comment