Tuesday, 24 February 2015

துபாயில் சூராவளியால் வந்த அதிர்ஷ்டம்…!


சூராவளி என்றாலே சோகமாகத் தான் இருக்கும். காரணம் உடமைகள் சேதம் ஏற்படும் அல்லது உயிர் சேதம் ஏற்படும். ஆனாலும் இவை இரண்டும் இல்லாமல் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திய சூறாவளியை நீங்கள் பார்த்து இருக்கவும் மாட்டீர்கள் கேள்வி பட்டும் இருக்க மாட்டீர்கள்.
இவ்வாறு அதிர்ஷ்ட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று துபாயில் பதிவாகியுள்ளது. துபாய், ஜூமைரா பகுதியில் கடந்த 11 ஆம் தேதி சூறாவளி காற்று வீசியுள்ளது. இதன்போது வீதியில் திடீரென் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காரணம் வாகனத்தில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வீதியில் இறங்கி பண நோட்டுக்களை பொறுக்கியுள்ளனர். 500 திர்ஹாம் (Dirham) மதிப்பு கொண்ட ஆயிரக்கணக்கான நோட்டுக்கள் வீதியில் பறந்து வர, வீதியில் சென்றவர்கள் கட்டு கட்டாக அள்ளிச் சென்றுள்ளனர்.
இரண்டு அல்லது மூன்று மில்லியன் பெறுமதியான திர்ஹாம் பண நோட்டுக்களே இவ்வாறு வீதியில் பறந்து வந்துள்ளன. எனினும் குறித்த பணத்தொகை எங்கியிருந்து வந்திருக்கும் என இது வரை தெரியவில்லை.

No comments:

Post a Comment