தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர் விஜய் சேதுபதி. இவர் ஸ்டுடியோ 9 தயாரிக்கும் ’வசந்தகுமாரன்’ படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் விஜய் சேதுபதிக்கும் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சுரேஷுக்கும் இடையே 'வசந்தகுமாரன்' படத்தயாரிப்பு சம்பந்தமாக பெரிய பிரச்சனை உருவானது. இதனால் படவேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடிக்க பெரிதாக விருப்பம் காட்டவில்லை.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுரேஷ், விஜய் சேதுபதியால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் கம்பெனியை முடக்கும் எண்ணத்தில் தான் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று இப்படம் மீண்டும் ஆரம்பமாகப் போவதாக ஒரு பேச்சு எழுந்தது. அதை அப்படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ 9 சுரேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை விஜய்சேதுபதி தரப்பிலிருந்து மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
விஜய் சேதுபதியின் அடுத்த வெளியீடாக 'இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்” ஆகிய படங்கள்தான் வெளிவரும் என்றும் தெரிவித்தார்கள். மேலும் ‘வசந்தகுமாரன்' படம் பற்றிய தனது இறுதி முடிவை விஜய் சேதுபதி விரைவிலேயே அறிவிப்பார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment