Wednesday, 25 February 2015

சூப்பர் சிங்கர் மோசடி!! விஜய் டி.வி., தனுஷுக்கு கெடுபிடி!! ஐரோப்பா தமிழர்கள் அதிரடி!!


விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவணத்தை ஈர்த்தது.
காரணம், ஈழத்து சிறுமியான ஜெஸ்ஸிகா என்பவர் இந்த நிகழ்சியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்த நிகழ்சியின் கடைசி கட்டம் சென்னையில் நடந்தது.
இது உலகம் முழுவதும், நேரடியாக ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை, மக்களே SMS மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.
இதற்காக, உலகத் தமிழர்களும், ஈழத்து சிறுமிக்காக வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தனர். இந்த SMSகள் மூலம் மட்டுமே விஜய் டிவிக்கு 20 கோடி ரூபாய் வரை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இறுதிச்சுற்றில், வெற்றியாளர்களை தேர்தெடுத்ததில் விஜய் டி.வி., முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
SMS வாக்குகள் அதிகம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்காமல், தங்கள் இஷ்டத்திற்கு விஜய் டி.வி., வெற்றியாளரை அறிவித்துள்ளதாக ஐரோப்பிய தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் விஜய் டி.வி., நிர்வாகம் மீதும், இறுதிச் சுற்றுக்கு வருகை தந்த, சிறப்பு விருந்தினர்களான, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப் போவதாக, அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை கோடிகளைத் தாண்டியதாகக் கூறிய விஜய் டி.வி., வக்கு எண்ணிக்கையின் முழு விபரத்தை வெளியிடாதது ஏன் என்றும் ஐரோப்பிய தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால், விஜய் டி.வி., முன்கூட்டியே முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், பார்வையாளர்களை கவருவதற்காகவும், பணம் சம்பாதிக்கவுமே இத்தகைய SMS சூழ்ச்சமங்களை கையாண்டுள்ளதாகவும் இலங்கையைச் சார்ந்த இணையங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனடிப்படையில், விஜய் டி.வி., மக்களை அவமதித்ததாகவும், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி நடைமுறை விதிகளை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து விஜய் டி.வி., மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தாம் வலியுறுத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து தீர்ப்பு மனுதாரர் தரப்பில் அமைந்தால், நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்களான அனுருத், தனுஷ், சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குநர் என அனைவருக்கும், ஐரோப்பிய சட்டப்படி, அந்நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படலாம்.
அது மட்டுமல்லாது, விஜய் டி.வி.,யும் ஐரோபாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment