பொதுவாக படப்பிடிப்பிலும் சரி, ரியல் லைஃப்லயும் சரி விஜய் அமைதியானவர், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், ஆனால் ஷாட் ரெடி ஓகே சொன்னதும் ஆளே மாறிவிடுவார் என்றுதான் சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள்.
ஆனால் புலி படப்பிடிப்பில் தன்னை பார்ப்பவர்கள் அட எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததுதான். சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் என பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர்.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைவதாகவும், அதன் பின்னர் படக்குழுவினர் கேரளா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் புலி படப்பிடிப்பு தளத்தில் மட்டும் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசுகிறாராம். இதை பார்க்கும் படக்குழுவினர் இது விஜய் தானா..? எப்படி இருந்த விஜய் இப்படி மாறிவிட்டாரே என்று கூறிவருகிறார்களாம்.
அதுவும் படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகளை படமாக்கி முடித்து பிறகும் கூட விஜய் அங்கேயே இருந்து அரட்டை அடிக்கிறாராம். விஜய்யின் இந்த மாற்றத்திற்கு காரணம் புலி படத்தின் கதை தானாம். இந்தப் படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த மகிழ்ச்சியில் தான் விஜய் கலகலப்பாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment