உலகக் கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை 1 விக்கெட் 3 பந்துகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
உலகக் கோப்பை போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.
அந்த அணி 97 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் ஊகித்திருந்த வேலையில் மறுபுறம் நிலைத்து ஆடிய ஷென்வாரி 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அணியின் ரன்கள் கனிசமாகக் கூடியிருந்தது.
அந்த அணி எதிர்பாராத விதமாக, 49.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment