Tuesday, 24 February 2015

மச்சான் உனக்கு வீடியோ வந்துச்சா..?


இன்றைய தேதிக்கு இளசுகள் பலரும் கேட்கும் கேள்வி எதுவென்று தெரியுமா..? டேய் மச்சான் உனக்கு வீடியோ வந்துச்சா..? என்பதுதான்.
காரணம் வாரத்துக்கு ஒரு நடிகையின் பெயரில் ஆபாச படங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பல நடிகைகள் இந்த சிக்கலில் மாட்டி தவிக்கின்றனர். இதில் இன்னும் எத்தனை நடிகைகள் சிக்குவார்களோ தெரியவில்லை.
முன்பெல்லாம் ஆபாச வீடியோக்களை மறைமுகமாக கம்ப்யூட்டர் மூலமாக யாரும் இல்லாத போது பார்ப்பார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. டெக்னாலஜி வளர்ச்சி என உலகமே சுருங்கி பாக்கெட்டில் மொபைலாக மாறிவிட்டது. சாதாரண மனிதனில் தொடங்கி அசாதாரண மனிதன் வரை எல்லோர் கையில் ஆண்ட்ராய்டாகவே உள்ளது.
இந்நிலையில் வாட்ஸ் அப் , முகநூல் என அனைத்தும் இப்போது கையில். ஆபாச வீடியோக்களை, தேடி சென்று பார்த்த காலம் போய் இப்போது கொஞ்சம் நவீனத்துவமாக நம் கையிலேயே கிடைத்து விடுகிறது. இது தவறு என நினைத்து ஒதுக்கினால் கூட, வாட்ஸ் அப்பில் வம்படியாக வந்து விழுகின்றன.
அப்படித்தான் சமீபகாலமாக ஹீரோயின்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது மார்ஃபிங்கா, இல்லை உண்மையான வீடியோக்களா என சிந்திப்பதற்கு முன்பு, அவர்கள் ஹீரோயின்கள் என்பதால் அது அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையில் இது பொதுவாக பெண்கள் சார்ந்த ஒரு அபாயம் என்றே சொல்ல வேண்டும்.
இதுபோல் எத்தனையோ பெண்கள், எத்தனையோ முறையில் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் தினமும் லட்சங்களில் பரிமாறப்படுவது உங்களுக்கு தெரியுமா?
இது உண்மை எனில்... இந்த வீடியோக்கள் எப்படி உருவாகியிருக்கும்? எனற கேள்வி தான் எல்லோரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள், தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விஷயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது டெக்னாலஜி வளர்ச்சியால் செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
அதை அழிக்காமல் நம் மொபைல்தானே என நினைத்து அப்படியே விட்டுவிட்டால், நம் மொபைலுக்குள் ஆக்கிரமித்து இருக்கும் அப்ளிகேஷன்களே அவ்வீடியோக்களை தற்காலிக சர்வருடன் இணைத்து விடும். கை தவறி போகலாம். அல்லது மொபைல் ரிப்பேர், யூஎஸ்பி கனெக்ஷன் என பல வழிகள் உள்ளன பரவுவதற்கு. மேலும் நாம் அழித்துவிட்ட இதுபோன்ற பைல்களும் மேற்கூறிய வழிகளில் பரவுவதற்கான ஆபத்து உள்ளது.
இன்னொருபுறம், நமக்கு நெருங்கிய வீட்டில் உள்ள வேலையாட்கள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ படம் பிடிக்கப்பட வாய்ப்புகளும் உள்ளன. மேலும் பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் , காதல் என்ற பெயரிலும் இப்போதெல்லாம் ஆண் , பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள துவங்கிவிட்ட நிலையில் அப்படியும் போகலாம். இதெல்லாம் நாம் செய்யும் தவறுகளும், கண்டுக்கொள்ளாமையும் தான்..

No comments:

Post a Comment