Wednesday, 25 February 2015

கெய்லின் இரட்டை சதத்துக்கும், இந்தியாவுக்கும் தொடர்பா??


உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தனது அபாரமான ஆட்டத்தால் 215 ரன்கள் அடித்தி 50வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். இதற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா??
அவர் இரட்டை சதம் அடிக்க பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஆனது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேட்டாம். இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஸ்பார்டான் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதே பேட்டினைதான், இந்திய கேப்டன் தோனி, ஆஸி கேப்டன் கிளார்க், வெஸ்ட் இண்டீஸின் டுவைன் ப்ராவோ ஆகியோரும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment