இந்தியாவில் பா.ஜ.க.வின் மொடி தலைமையிலான அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2015-16 ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இந்த பட்ஜட்டில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒரே டிக்கெட்டில், இரயில் பஸ் இரண்டிலுமே பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் வைஃபை வசதி, தனியாருடன் கைகோர்த்தல், வீட்டுக்கே வந்து பயணச் சீட்டை கொடுப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் சிறப்பம்சங்கள் சில பின்வருமாறு:
- — பயணிகள் கட்டணங்கள், சரக்கு கட்டணங்கள் புதிதாக உயர்த்தப்படவில்லை
- — மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் — அதிவேக ரயில்களுக்காக வைர நாற்கர திட்டம்
- — 9 பிரிவுகளில், 160 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ வேகம் வரை ரயில்கள் இயக்கம்
- — இணையதளம் மூலமாக ஒரே நேரத்தில் 7,200 பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வசதி; மேலும் ஓரே நேரத்தில் 1.20 லட்சம் பேர் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த முடியும்
- — செல்போன், தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை பிரபலபடுத்துதல்
- — ஆன்லைன் மூலம் நடைமேடை, முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் விற்பனை
- — ரயில் நிலையங்களில் பார்க்கிங் டிக்கெட்டுடன் இணைத்து நடைமேடை டிக்கெட் விற்பனை
- — மகளிர் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளில், ரயில்வே பெண் காவலர் பணிக்கு 4,000 பேர் புதிதாக தேர்வு
- — அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு எடுக்கும் அறை
- — முக்கிய ரயில் நிலையங்களில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார்கள்
- — ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து செல்போன் வாயிலாக பயணிகள் புகார் செய்ய வசதி
- — எஸ்எம்எஸ் மூலமாக உணவுக்கு ஆர்டர் செய்யும் வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் உணவு வளாகங்கள்
- — சுத்தப்படுத்தும் பணிக்காக 40 சதவீத நிதி அதிகரிப்பு
- — சுத்தப்படுத்தும் பணிகள் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிப்பு
- — ரயில் நிலையங்கள், ரயில்களில் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு வசதி
- — முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள், புறநகர் ரயில்களில் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் வசதி
- — 58 புதிய ரயில்கள். 11 ரயில்களின் தூரம் நீட்டிப்பு. மும்பையில் அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 864 புதிய புறநகர் மின்சார ரயில்கள்.
- — ரயில் இயக்கும் பணியைத் தவிர அனைத்து திட்டங்களிலும் அன்னிய நேரடி முதலீடு
- — ரயில்வே உள்கட்டுமான பணிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீடு
- — தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில், இணையதள வசதி
- — ஏ-1 ரயில் நிலையங்கள், ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வை-ஃபை வசதி
- — தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளுக்கு ரயில்வே பல்கலைக்கழகம்
- — அரசு - தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்துக்கு சில ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்
- — முக்கிய ரயில் நிலையங்களில் சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்
- — பயணி ஒருவரின் ஒரு கிலோ மீட்டர் தூர பயணத்தால் அரசுக்கு 2000-2001ஆம் நிதியாண்டில் 10 பைசா என்றிருந்த இழப்பு, 2012-2013ஆம் நிதியாண்டில் 23 பைசாவாக அதிகரிப்பு
- — 2014-2015ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அதிகபட்சமாக ரூ.65,455 கோடியில் ஒரு திட்டம் தயாரிப்பு
- — செலவினங்கள் ரூ.1,49,176 லட்சம் கோடி
No comments:
Post a Comment