1000 ஆண்டுகள் பழைமையான புத்த சிலை ஒன்றை CT ஸ்கேன் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள் அந்த சிலைக்குள் துறவியொருவரின் மம்மியாகிய எச்சங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெதர்லாந்தில் மியண்டா மருத்துவ நிலையத்திலுள்ள டிரென்ட்ஸ் அருங்காட்சியகத்தில் மேற்படி புத்த சிலை CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 11ஆம் அல்லது 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த மேற்படி சிலை சீன தியான் பள்ளி ஒன்றின் உரிமையாளரான பெளத்த துறவி லியுகுவானுக்கு உரிமையானது என பெளத்த நிபுணரான எறிக் புறுஜின் தலைமையிலான ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த துறவியின் அனைத்து உறுப்புகளும் வெட்டி அகற்றப்பட்டுள்ளமையும் மேற்படி ஸ்கேன் பரிசோதனையில் அறியப்பட்டுள்ளது. அந்த துறவியின் மம்மியைக் கொண்டுள்ள புத்த சிலையின் அருகே சீன மொழியில் எழுதப்பட்ட துண்டுக்குறிப்பும் கண்டறியப்பட்டது.
ஸ்கேன் பரிசோதனையையடுத்து துறவியின் மம்மி எச்சங்களை கொண்ட புத்த சிலை எதிர்வரும் மே மாதம் வரை ஹங்கேரியிலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெளத்த மக்களின் அநேகர் பெளத்த துறவியான லிகுவான் உண்மையில் இறக்கவில்லை எனவும் அவர் ஆழ்நிலைத்தியானத்தில் இருப்பதாகவும் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment